Wednesday, June 6, 2012

அம்மா அரசு

            அம்மா அரசு ஓராண்டில் நடத்திய நூறாண்டு சாதனைகளைப் பற்றி தினந்தோறும் நாளேடுகளில் வெளிவரும் முழுப்பக்க வண்ண விளம்பரங்கள், இந்தியாவில் மிகப்பெரிய நிர்வாகச் சீர்திருத்தங்களை கொண்டு வந்த வாரன் ஹாஸ்டிங்ஸ், லார்ட் பென்டிங்க், லார்ட் ரிப்பன், லார்ட் டல் ஹவுசி போன்றவர்களை விட, புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மிகச் சிறந்த நிர்வாகி என்ற எண்ணத்தை உருவாக்கி வருகின்றன. 

இந்த பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டை அம்மா ஒரு மாநில அரசின் முதல்வராக இருந்து கொண்டு போக்கியிருக்க முடியுமா ? பெட்ரோல் டீசல் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விஷயம் இல்லையா ? எதற்கெடுத்தாலும் திமுககாரன் போல ஜெயலலிதாவை குறை சொல்லலாமா ? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியில் எழும்.

எரிபொருள் தட்டுப்பாடு பெட்ரோல் விலையேற்றப்பட்ட புதன் அன்று இரவு முதல் லேசாகத் தொடங்கியது. வியாழனன்று சற்றே முற்றியது. வெள்ளி மாலை முதல், பங்குகளில் கூட்டம் கூடத் தொடங்கியது. சனிக்கிழமையெல்லாம் நெருக்கடி முற்றியது. ஞாயிறன்று அடிதடி தொடங்கியது. திங்கட்கிழமை கைமீறிப் போனது.

பெட்ரோலியப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் (Essential Commodities Act, 1955) வருகிறது. இச்சட்டத்தின் பகுதி 4ல் பத்தி 4.1 கீழ் கண்டவாறு கூறுகிறது.

ESSENTIAL COMMODITIES ACT, 1955

4.1 The Essential Commodities Act, 1955 was enacted to ensure the easy availability of essential commodities to consumers and to protect them from exploitation by unscrupulous traders. The Act provides for the regulation and control of production, distribution and pricing of commodities which are declared as essential for maintaining or increasing supplies or for securing their equitable distribution and availability at fair prices. Exercising powers under the Act, various Ministries/Departments of the Central Government and under the delegated powers, the State Governments/UT Administrations have issued Control Orders for regulating production, distribution, pricing and other aspects of trading in respect of the commodities declared as essential. The enforcement/implementation of the provisions of the Essential Commodities Act, 1955 lies with the State Governments and UT Administrations.



அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955, கள்ளச் சந்தைக்காரர்களால் நுகர்வோர் அலைகழிக்கப்படாமல் அத்தியாவசியப் பொருட்கள், நுகர்வோருக்கு தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காக உருவாக்கப்பட்டது. இச்சட்டம், அத்தியாவசியப்பொருட்களை, வரைமுறை செய்வதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும், விநியோகம் செய்வதற்கும், விலை நிர்ணயம் செய்வதற்கும், தடையில்லா விநியோகத்திற்காகவும் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி மத்திய அரசின் பல்வேறு துறைகளும், மாநில அரசுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம், விலை மற்றும் இதர விஷயங்கள் குறித்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும், பல்வேறு ஆணைகள் பிறப்பித்துள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கூறுகளை அமல்படுத்தும் பொறுப்பு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களையே சாரும்.

இச்சட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளவை என்னவென்று பார்ப்போம்.

LIST OF COMMODITIES DECLARED ESSENTIAL UNDER THE ESSENTIAL COMMODITIES ACT, 1955

(As on February, 2005)

Declared under Clause (a) of Section 2 of the Act



Cattle fodder, including oilcakes and other concentrates.
Coal, including coke and other derivatives.
Components parts and accessories of automobiles.
Cotton and woollen textiles.
Drugs.
Foodstuffs, including edible oilseeds and oils.
Iron and Steel, including manufactured products of Iron & Steel.
Paper, including newsprint, paperboard and strawboard.
Petroleum and Petroleum products.
Raw Cotton, either ginned or unginned and cotton seed.
Raw Jute.
இதில் பெட்ரோலியப் பொருட்கள் வரிசை எண் 9ல் வருகிறது. இப்போது சட்டத்தின் முதல் பகுதிக்கு வருவோம். “அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955, கள்ளச் சந்தைக்காரர்களால் நுகர்வோர் அலைகழிக்கப்படாமல் அத்தியாவசியப் பொருட்கள், நுகர்வோருக்கு தங்கு தடையில்லாமல் கிடைப்பதற்காக உருவாக்கப்பட்டது.”

இச்சட்டத்தின் கடைசி வரியைப் பார்ப்போம். “அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கூறுகளை அமல்படுத்தும் பொறுப்பு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களையே சாரும்.”

இப்போது பெட்ரோல் டீசல் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டிய பொறுப்பு யாருடையது என்பது புரிகிறதா ? பெட்ரோலியப் பொருட்கள் என்பதால், இது முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டைச் சேர்ந்தது என்ற எண்ணத்திலேயே நாம் இருக்கிறோம். கடந்த வாரம் ஏற்பட்ட தட்டுப்பாட்டைப் போக்க வேண்டிய பொறுப்பு முழுக்க முழுக்க மாநில அரசையே சார்ந்தது.

மேலும் இப்பெட்ரோலியப் பொருட்களுக்கு மாநில அரசு வரி விதித்து அதன் மூலம் வரி வருவாய் ஈட்டி வருகிறது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. இந்த அத்தியாவசியப் பொருட்கள் தடைச்சட்டத்தின் படி, மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் வானளாவிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அதிகாரங்களில் நீதிமன்றங்கள் கூட தலையிட முடியாது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தச் சட்டம் மட்டுமல்ல தோழர்களே.. மத்திய அரசு, பெட்ரோலியப் பொருட்களுக்கென்று பிரத்யேகமாக ஒரு சட்டம் இயற்றியுள்ளது. The Petroleum Products (Maintenance of Production, Storage and Supply) Order, 1999 என்று அழைக்கப்படும் இச்சட்டம், என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது என்பதை இச்சட்டத்தின் தொடக்கம் கூறுகிறது.

In exercise of the powers conferred by section 3 of the Essential Commodities Act, 1955, (10 of 1955), in Order to regulate production, storage and supply of petroleum products in the interest of sustaining public life, economy and protecting consumers interest.

பொதுமக்களின் நலன்கருதியும், பொதுவாழ்வு நலன் கருதியும், பொருளாதார நலன் கருதியும், நுகர்வோர் நலன் கருதியும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, இந்த ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆணையின் பிரிவு 6 என்ன கூறுகிறது தெரியுமா ?

6. Regulation of retail supply of petroleum products - (1) Where under any agreement between a dealer and an oil marketing company, a petroleum product is to be supplied at a retail outlet, and the central Government is of the opinion that such petroleum product may not be available at the retail outlet for any reason whatsoever, either wholly or partially to meet the demand of the general public, it may, by order in writing, direct any other oil marketing company to deliver, for such period as may be specified in the order or such period by which the original supplying company is able to restore the supply , such petroleum product at such retail outlet and thereupon it shall be the duty of the oil marketing company specified in the order to deliver, and of the dealer to receive and sell the petroleum product so ordered to be delivered against price and other charges.

”பெட்ரோலியப் பொருட்களை ஒரு டீலருக்கு வழங்க வேண்டிய ஒரு எண்ணை நிறுவனம், ஏதாவதொரு காரணத்திற்காக, பொது மக்களின் தேவைக்கு ஏற்ப வழங்க இயலாவிட்டால், அந்த எண்ணை நிறுவனத்தை தேவையான கால அளவுக்கு, வழங்குமாறு எழுத்து பூர்வமான உத்தரவு மூலம், தேவையான பொருட்களை வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வுத்தரவைப் பெற்ற சம்பந்தப்பட்ட எண்ணை நிறுவனம், சம்பந்தப்பட்ட டீலருக்கு அந்த பெட்ரோலியப் பொருட்களை வழங்கியே தீர வேண்டும்.” இந்தச் சட்டத்தில் உள்ள அதிகாரம், மாநில அரசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சரி. இப்போது, இப்பெட்ரோலியப் பொருட்களின் சீரான விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மற்றும் கடமை மாநில அரசினுடையது என்பதைப் பார்த்தோம்.

மாநில அரசு என்ன செய்தது என்பதைப் பார்ப்போம். தலைமைச் செயலக வட்டாரங்களில் விசாரித்தபோது கடந்த 24.05.2012 முதல் தமிழகத்தில் இருந்து வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து,அம்மாவுக்கு தகவல் தெரிந்ததே நேற்றுதான் (29.05.2012). இத்தகவல் தெரிந்ததும் அதிகாரிகளை வறுத்தெடுத்த அம்மா, உடனடியாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.

அதிகாரிகள் கூட்டம் நேற்று காலை நடைபெற்ற உடனேயே துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த பங்குகள் நேற்று மாலை முதல் திறக்கப்பட்டதைப் பார்த்திருப்பீர்கள்.

Friday, May 4, 2012

நாக்கின் நிலைதான் என் நிலையும்- ஜெ



பிறந்தது முதல் ஓய்வின்றி உழைக்கும் நாக்கின் நிலைதான் என் நிலையும்- ஜெ. செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 24, 2012, 16:42 [IST]

சென்னை: போர் வீரர்களுக்கு கூட போர் இல்லாத காலத்தில் ஓய்வு இருக்கும். ஆனால் மனித நாக்குக்கு ஓய்வே கிடையாது. அது பிறந்தது முதல் 32 பற்களுக்கு இடையே தினமும் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது. கண்டிப்பு காட்ட வேண்டிய இடத்தில் கண்டிப்போடு பேசுகிறது. கட்டளையிடும் போது அதற்கேற்ற வகையில் பேசுகிறது. கனிவு காட்டும் போது தேன் சுவை சொற்களை சொல்கிறது. மிரட்ட வேண்டிய நேரத்தில் அதையும் செய்கிறது. சுவை மிக்க உணவுகளையும் சுவைக்கிறது. இப்படி பல்வேறு கடமைகளையும் திறமையாக காலம் முழுவதும் நாக்கு செயல்படுத்தி வருகிறது. இந்த நாக்கு போலத்தான் என்னுடைய நிலைமையும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
.
தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசுகையில் அவர் கூறியதாவது:

மண்ணுக்கு மரம் காவல், மரத்திற்கு இலை காவல், பயிருக்கு வேலி காவல், உயிருக்கு உடல்காவல், கண்ணுக்கு இமை காவல், கடலுக்கு கரை காவல் என்பது போல காப்பது ஒன்றையே கடமை என செயல்படுவதுதான் காவல் துறை. அந்த காவல் துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளின் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்கள் சிலர் காவல் துறை எப்படி பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தனர். ஒரு சில உறுப்பினர்களின் பேச்சில் கட்சி கண்ணோட்டம் இருந்தது. சிலர் பாராட்டு தெரிவித்தனர்.

உடலில் பல்வேறு உறுப்புகள் உள்ளன. இதில் தலை சிறந்தது நாக்கு. சாமர்த்தியமாக, சாதுர்யமாக, திறமையாக செயல்படுவதில் நாக்குக்கு இணை எதுவும் இல்லை. வாயில் நாக்கை சுற்றி 32 பற்கள் உள்ளன. இது அந்த நாக்கை கடித்து குதறி கிழித்து விடும் கூர்மை பெற்றவை. ஆனாலும் இந்த சாமர்த்தியமான நாக்கு 32 பற்களுக்கு இடையே இருந்து திறமையாக, வெற்றிகரமாக காலம் தள்ளி வருகிறது.

போர் வீரர்களுக்கு கூட போர் இல்லாத காலத்தில் ஓய்வு இருக்கும். ஆனால் மனித நாக்குக்கு ஓய்வே கிடையாது. அது பிறந்தது முதல் 32 பற்களுக்கு இடையே தினமும் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது.

கண்டிப்பு காட்ட வேண்டிய இடத்தில் கண்டிப்போடு பேசுகிறது. கட்டளையிடும் போது அதற்கேற்ற வகையில் பேசுகிறது. கனிவு காட்டும் போது தேன் சுவை சொற்களை சொல்கிறது. மிரட்ட வேண்டிய நேரத்தில் அதையும் செய்கிறது. சுவை மிக்க உணவுகளையும் சுவைக்கிறது.

இப்படி பல்வேறு கடமைகளையும் திறமையாக காலம் முழுவதும் நாக்கு செயல்படுத்தி வருகிறது. இந்த நாக்கு போலத்தான் என்னுடைய நிலைமையும் (முதல்வர் இப்படிச் சொன்னபோது டமமெவன்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேசையைத் தட்டினர்)

தமிழகத்தில் பிற எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளனர். அவர்கள் ஜெயலலிதா எப்போது தவறு செய்வார், பிழை செய்வார் என்று பூதக்கண்ணாடி வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல பத்திரிகைகளும், தொலைக்காட்சியினரும் ஜெயலலிதா தவறு செய்ய மாட்டாரா? அதை வைத்து பத்திரிகைகளின் விற்பனையை அதிகரிக்கலாம், டிவிக்களின் டி.ஆர்.பி. ரேட்டை உயர்த்தலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டெல்லியிலே செயல்படும் மத்திய அரசோ ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து விட்டாரா? இனி நாம் தமிழகத்தைவாழ விட கூடாது என்று கங்கணம் கட்டி செயல்படுகின்றனர். ஜெயலலிதா விடுக்கும் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு நாம் சலுகைகளை வழங்கினால் ஜெயலலிதா அசைக்க முடியாத சக்தியாக மாறி விடுவார் என்று மத்திய அரசு நினைக்கிறது. அதனால்தான் மண்ணெண்ணெய் வேண்டுமா? அதை உடனே 50 சதவீதமாக குறைத்து விடுங்கள் என்று உத்தரவு போடுகிறார்கள்.

தமிழக முதலமைச்சர் எத்தனை முறை கேட்டாலும் அவருக்கு நிதி வழங்காதே என்று நிதித்துறைக்கு கட்டளையிடுகிறார்கள். தமிழகம் மின் பற்றாக்குறையால் திண்டாடுகிறதா? அந்த மக்களே இருளில் தவிக்கிறார்களா? கவலையில்லை. தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் வழங்காதே என்று இப்படி பல உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்கிறது.

தமிழகத்தை வாழ விடக் கூடாது. தமிழகம் தலை நிமிர்ந்து விடக் கூடாது என மத்திய அரசு பல்வேறு அடக்குமுறைகளை ஏவுகிறது. இத்தனை இடையூறுகள் செய்தாலும் போதுமான மண்ணெண்ணெய் வழங்காவிட்டாலும், மின்சாரம் வழங்காவிட்டாலும் நிதி ஆதாரம் கிடைக்கவில்லை என்றாலும் இங்கு இயன்ற வரையில் நிதி ஆதாரங்களை திரட்டி வெற்றிகரமாக இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.

இப்படி என்னை சுற்றி மத்திய அரசும் சரி, இங்கே உள்ள எதிர்க்கட்சிகளும் சரி. எதிரிகளாகவே உலா வருகிறார்கள். அவர்களின் எதிர்ப்புகளையும் மீறி வெற்றிகரமாக ஆட்சி செய்வதுடன் பல்வேறு சாதனைகளையும் நாம் செய்து கொண்டு வருகிறோம்.

எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அவற்றை மீறி தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி வேதனைகளை சாதனைகளாக்கி இந்த ஆட்சியை நாங்கள் வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். அதனால்தான் நான் என்னுடைய நிலையை நாக்குக்கு இணையாக கூறினேன்.

வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா கூறியது போல இங்கு என்னை வசைப்பாடியவர்களுக்கும், இங்கு ஆலோசனை வழங்கியவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.



thanks- vallamtamil

M L A mail




1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in

2 Alandur - mlaalandur@tn.gov.in

3 Alangudi - mlaalangudi@tn.gov.in

4 Alangulam - mlaalangulam@tn.gov.in

5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in

6 Anaicut -- mlaanaicut@tn.gov.in

7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in

8 Andimadam --- mlaandimadam@tn.gov.in

9 Andipatti----mlaandipatti@tn.gov.in

10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in

11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in

12 Arantangi-- mlaarantangi@tn.gov.in

13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in

14 Arcot --- mlaarcot@tn.gov.in

15 Ariyalur --mlaariyalur@tn.gov.in

16 Arni -- mlaarni@tn.gov.in

17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in

18 Athoor--- mlaathoor@tn.gov.in

19 Attur ---mlaattur@tn.gov.in

20 Avanashi ---mlaavanashi@tn.gov.in

21 Bargur ---mlabargur@tn.gov.in

22 Bhavani---mlabhavani@tn.gov.in

23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in

24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in

25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in

26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in

27 Chengam---mlachengam@tn.gov.in

28 Chepauk---mlachepauk@tn.gov.in

29 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in

30 Cheyyar---mlacheyyar@tn.gov.in

31 Chidambaram---mlachidambaram@tn.gov.in

32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in

33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in

34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in

35 Colachel---mlacolachel@tn.gov.in

36 Coonoor----mlacoonoor@tn.gov.in

37 Cuddalore---mlacuddalore@tn.gov.in

38 Cumbum---mlacumbum@tn.gov.in

39 Dharapuram---mladharapuram@tn.gov.in

40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in

41 Dindigul---mladindigul@tn.gov.in

42 Edapadi---mlaedapadi@tn.gov.in

43 Egmore---mlaegmore@tn.gov.in

44 Erode----mlaerode@tn.gov.in

45 Gingee---mlagingee@tn.gov.in

46 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in

47 Gudalur----mlagudalur@tn.gov.in

48 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in

49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in

50 Harbour-----mlaharbour@tn.gov.in

51 Harur----mlaharur@tn.gov.in

52 Hosur---mlahosur@tn.gov.in

53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in

54 Jayankondam---mlajayankondam@tn.gov.in

55 Kadaladi---mlakadaladi@tn.gov.in

56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in

57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in

58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in

59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in

60 Kangayam---mlakangayam@tn.gov.in

61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in

62 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in

63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in

64 Karur----mlakarur@tn.gov.in

65 Katpadi----mlakatpadi@tn.gov.in

66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in

67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in

68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in

69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in

70 Kolathur---mlakolathur@tn.gov.in

71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in

72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in

73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in

74 Kulithalai----mlakulithalai@tn.gov.in

75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in

76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in

77 Kuttalam---mlakuttalam@tn.gov.in

78 Lalgudi---mlalalgudi@tn.gov.in

79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in

80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in

81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in

82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in

83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in

84 Mangalore----mlamangalore@tn.gov.in

85 Mannargudi----mlamannargudi@tn.gov.in

86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in

87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in

88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in

89 Melur---mlamelur@tn.gov.in

90 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in

91 Mettur---mlamettur@tn.gov.in

92 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in

93 Morappur---mlamorappur@tn.gov.in

94 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in

95 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in

96 Musiri---mlamusiri@tn.gov.in

97 Mylapore---mlamylapore@tn.gov.in

98 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in

99 Nagercoil---mlanagercoil@tn.gov.in

100 Namakkal---mlanamakkal@tn.gov.in

101 Nanguneri---mlananguneri@tn.gov.in

102 Nannilam----mlanannilam@tn.gov.in

103 Natham-----mlanatham@tn.gov.in

104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in

105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in

106 Nilakottai---mlanilakottai@tn.gov.in

107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in

108 Omalur---mlaomalur@tn.gov.in

109 Orathanad---mlaorathanad@tn.gov.in

110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in

111 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in

112 Palacode---mlapalacode@tn.gov.in

113 Palani----mlapalani@tn.gov.in

114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in

115 Palladam---mlapalladam@tn.gov.in

116 Pallipattu---mlapallipattu@tn.gov.in

117 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in

118 Panruti---mlapanruti@tn.gov.in

119 Papanasam---mlapapanasam@tn.gov.in

120 Paramakudi---mlaparamakudi@tn.gov.in

121 ParkTown----mlaparktown@tn.gov.in

122 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in

123 Pennagaram-----mlapennagaram@tn.gov.in

124 Perambalur----mlaperambalur@tn.gov.in

125 Perambur---mlaperambur@tn.gov.in

126 Peranamallur---mlaperanamallur@tn.gov.in

127 Peravurani---mlaperavurani@tn.gov.in

128 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in

129 Pernambut---mlapernambut@tn.gov.in

130 Perundurai---mlaperundurai@tn.gov.in

131 Perur---mlaperur@tn.gov.in

132 Pollachi---mlapollachi@tn.gov.in

133 Polur---mlapolur@tn.gov.in

134 Pongalur---mlapongalur@tn.gov.in

135 Ponneri---mlaponneri@tn.gov.in

136 Poompuhar---mlapoompuhar@tn.gov.in

137 Poonamallee----mlapoonamallee@tn.gov.in

138 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in

139 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in

140 Radhapuram---mlaradhapuram@tn.gov.in

141 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in

142 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in

143 Ranipet---mlaranipet@tn.gov.in

144 Rasipuram----mlarasipuram@tn.gov.in

145 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in

146 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in

147 Royapuram---mlaroyapuram@tn.gov.in

148 Saidapet---mlasaidapet@tn.gov.in

149 Salem -I---mlasalem1@tn.gov.in

150 Salem-II---mlasalem2@tn.gov.in

151 Samayanallur---mlasamayanallur@tn.gov.in

152 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in

153 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in

154 Sankari---mlasankari@tn.gov.in

155 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in

156 Sattangulam----mlasattangulam@tn.gov.in

157 Sattur---mlasattur@tn.gov.in

158 Sedapatti----mlasedapatti@tn.gov.in

159 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in

160 Sholavandan---mlasholavandan@tn.gov.in

161 Sholinghur----mlasholinghur@tn.gov.in

162 Singanallur---mlasinganallur@tn.gov.in

163 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in

164 Sivaganga----mlasivaganga@tn.gov.in

165 Sivakasi---mlasivakasi@tn.gov.in

166 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in

167 Srirangam---mlasrirangam@tn.gov.in

168 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in

169 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in

170 Talavasal---mlatalavasal@tn.gov.in

171 Tambaram---mlatambaram@tn.gov.in

172 Taramangalam---mlataramangalam@tn.gov.in

173 Tenkasi----mlatenkasi@tn.gov.in

174 Thalli---mlathalli@tn.gov.in

175 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in

176 Thanjavur---mlathanjavur@tn.gov.in

177 Theni---mlatheni@tn.gov.in

178 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in

179 Thirumayam---mlathirumayam@tn.gov.in

180 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in

181 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in

182 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in

183 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in

184 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in

185 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in

186 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in

187 Thottiam---mlathottiam@tn.gov.in

188 Tindivanam---mlatindivanam@tn.gov.in

189 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in

190 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in

191 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in

192 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in

193 Tiruppattur-194----mlatiruppattur194@tn.gov.in

194 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in

195 Tirupporur----mlatirupporur@tn.gov.in

196 Tiruppur----mlatiruppur@tn.gov.in

197 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in

198 Tiruttani----mlatiruttani@tn.gov.in

199 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in

200 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in

201 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in

202 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in

203 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in

204 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in

205 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in

206 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in

207 Triplicane----mlatriplicane@tn.gov.in

208 Tuticorin---mlatuticorin@tn.gov.in

209 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in

210 Udumalpet---mlaudumalpet@tn.gov.in

211 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in

212 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in

213 Usilampatti---mlausilampatti@tn.gov.in

214 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in

215 Valangiman----mlavalangiman@tn.gov.in

216 Valparai----mlavalparai@tn.gov.in

217 Vandavasi----mlavandavasi@tn.gov.in

218 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in

219 Vanur----mlavanur@tn.gov.in

220 Varahur-----mlavarahur@tn.gov.in

221 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in

222 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in

223 Vedasandur---mlavedasandur@tn.gov.in

224 Veerapandi---mlaveerapandi@tn.gov.in

225 Vellakoil---mlavellakoil@tn.gov.in

226 Vellore---mlavellore@tn.gov.in

227 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in

228 Vilavancode---mlavilavancode@tn.gov.in

229 Villivakkam---mlavillivakkam@tn.gov.in

230 Villupuram---mlavillupuram@tn.gov.in

231 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in

232 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in

233 Yercaud---mlayercaud@tn.gov.in

234 ThousandLights---mlathousandlights@tn.gov.in

Reference By : http://www.tn.gov.in/telephone/email-MLA.html 
Government of Tamil Nadu Welcomes You

கருணையுள்ள தாய்


ஒரு கருணையுள்ள தாய் ,தனது பிரியமுள்ள குழந்தைகளை பார்த்து சிரிக்கும் தெய்வீக சிரிப்பு!அழுக்கில்லாத மனசில் இருந்து தான் இது போன்ற ஒளி சிந்தும் சிரிப்பு வெளி வர முடியும்!வாழ்க என் தெய்வம்!

Thursday, February 2, 2012

அம்மா ஜெ

புரட்சித்தலைவி, அம்மா ஜெ. ஜெயலலிதா அவர்கள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார்.
தமிழ்நாடு, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஊரை பூர்வீகமாக கொண்ட புரட்சிதலைவி கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல்கோட்டை கிராமத்தில் பிறந்தவர்.


சோழர்கள் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைணவர்களின் வாழ்க்கை சிக்கலானதும் அங்கிருந்து பல குடும்பங்கள் இடம் பெயர்ந்தன. அவற்றில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேல்கோட்டைக்கு வந்தன. அந்தக் குடும்பங்களில் ஒன்றுதான் புரட்சிதலைவியின் தாத்தா குடும்பமும். அவர் இந்த ஊர் கோவிலில் அர்ச்சகராக இருந்தார்.
இவரது அன்னை சந்தியாவும் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். சென்னையில் இவரது பள்ளிப்படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் கிட்டின. ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்
பின்னர், அ. தி. மு. க. வில் இணைந்து,அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். புரட்சிதலைவர் எம். ஜி.ஆர் அவர்களின் மறைவுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து [2] 1989 ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார். 1989 முதல் 1991வரை சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக பணியாற்றினார். 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் மே 12, 2006 வரையிலும் தமிழக முதல்வராகவும் இருந்தார். 2011 இல் தமிழக முதல்வராக 3 வது முறையாகத் தேர்வு ஆகியுள்ளார்